லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் இன்று வெளியானது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக கேரளாவில் மட்டும் இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் முன்னரே வெளியான டீசர், டிரைலர், பாடல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய், அஜித் படங்களை போல அதிகமாகவே இருந்தது.

அறிமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா மிகப்பிரதான வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின், நவீன் குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  X வீடியோஸ் - விமர்சனம்

நயன்தாரா சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ரங்கோலி வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே சிரமப்படும் நயன்தாராவின் அம்மா சரண்யாவிற்கு கேன்சர் நோய் வருகிறது. இதனை குணப்படுத்த நிறைய பணம் தேவைப்படும் நேரத்தில் யதார்த்தமாக ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்குகிறார் நயன்தாரா.

அப்பாவி பெண்ணாக இருக்கும் நயன்தாராவை வைத்து தங்கள் திட்டங்களை நிறைவேற்ற பார்க்கிறது அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல். ஆனால் அந்த கும்பலிடம் இருந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாயின் சிகிச்சைக்கு பணம் பறிக்கும் நயன்தாரா அவர்களிடம் இருந்து எப்படி விடுபடுகிறார், அவர்களை எப்படி போலீசில் பிடித்துக்கொடுக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.

இதையும் படிங்க பாஸ்-  நயன்தாராதான் ஹீரோயின் - ரஜினி முடிவால் அப்செட் ஆன கீர்த்தி சுரேஷ்

அமைதி மற்றும் பதட்டத்துடனே படம் முழுக்க வரும் நயன்தாராவின் நடிப்பு செம்ம வரவேற்பு. அப்பாவித்தனமான சில வசனங்களால் நயன்தாரா செம்ம அப்லாஸ் அள்ளுகிறார். நயன்தாராவுக்கு அடுத்தபடியாக யோகிபாபு படத்தில் உள்ளார். முதல் பாதியில் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி பட்டைய கிளப்பி இருக்கிறார். கோலமாவு கோகிலா காமெடி கலாட்டாவில் தியேட்டர்கள் சிரிப்பலையில் மூழ்குகிறது.

இதையும் படிங்க பாஸ்-  பணம் கேட்டு புளூ சட்டை மாறன் மிரட்டினார் - ஷக்தி சிதம்பரம் புகார்

படத்தின் முதல்பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது. அதனை படத்தின் காமெடி பேலன்ஸ் செய்துவிடுகிறது. பாடல்களை ஏற்கனவே ஹிட் செய்துவிட்ட அனிருத் பின்னணி இசையிலும் பின்னிருக்கிறார். ஆனால் சில இடங்களில் டயலாகையே கேட்க விடாத அளவுக்கு இசை வருகிறது. நயன்தாரா, யோகிபாபு வரும் காட்சிகளில் கைத்தட்டல்கள் பறக்கிறது. இயக்குநர் கதாப்பாத்திரங்களை அருமையாக வடிவமைத்திருக்கிறார். மொத்தத்தில் கோலமாவு கோகிலா எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

ரேட்டிங்: 3.5/5