அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள் யார்?

தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜீத்குமார் பிறந்தாள் இன்று. தமிழகமெங்கும் அவரது ரசிகர்கள் இதனை ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர். பல இடங்களில் ஏழை மக்களுக்கு உதவிகளும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், சுரேஷ், கலையரசன், விக்ரம் பிரபு, ராகுல்தேவ், நடிகைகள் நயன்தாரா, சிம்ரன், ராதிகா சரத்குமார், ஹன்சிகா, ராய் லட்சுமி, இயக்குனர் அறிவழகன் உள்ளிட்ட்ட பலரும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.