ஆட்டோகிராஃப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடலை சித்ராவுடன் இணைந்து பாடியவர் கோமகன். பார்வையற்றவரான இவரின் இந்த பாடலை பா. விஜய் எழுதி மிகப்பெரும் புகழ்பெற்று பாடிய சித்ராவுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக பலரும் இந்த பாடலை இன்றளவும் விரும்பி கேட்டு வருகின்றனர்.

இவரைக் காதலித்து மணந்தவர், அனிதா. இந்தத் தம்பதிக்கு மோனஸ், மோவின் என இரு மகன்கள் உள்ளனர் `ராகப்ரியா’ என்கிற பெயரில் மாற்றுத்திறனாளிகள் இசைக்குழுவையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில்  கோமகன் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கிளம்பி உள்ளார் அவர் மனைவி அனிதா. அதற்கு காரணமாக அவர் கூறுவது.

எனக்குச் சொந்த ஊர், நாகர்கோவில். சென்னைக்கு வேலை தேடி வந்தேன். மாதவரத்துல இருக்கிற தேசியப் பார்வையற்றோர் நலச் சங்கத்துல இன்ஸ்ட்ரக்டர் வேலை கிடைச்சது.

பார்வையற்றவர்களுக்கு உதவுகிற பணி அது. பார்வையற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிற அந்தச் சங்கத்தின் மூலம் வயர் சேர் போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கும்  வேலையை பார்வையற்றவர்களுக்கு கொடுக்கும்.

அந்தவேலை பார்த்து வந்த, கோமகன்.மீது எனக்கு காதல் வந்தது. அவரின் கனிவான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டோம் இல்லறத்திலும் குறையில்லை இரண்டு குழந்தை பிறந்தது.

ஆட்டோகிராஃப் படத்திற்கு பின் இவருக்கு நிறைய சினிமா வாய்ப்புகளும் பெண்கள் ரீதியான தொடர்புகளும் ஏற்பட, ஒரு பெண்ணிடம் தவறாக கூட நடக்க முயற்சி செய்தார். விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போச்சு. குழந்தைகளுக்காகவும் குடும்ப கௌரவத்துக்காகவும் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன்.

பசங்களைக் கொண்டுபோய் விட அவங்க ஸ்கூலுக்குப் போயிட்டிருந்த பழக்கத்துல அங்க வேலை செய்த ஒரு டீச்சர்கூட பழக்கம் ஏற்பட்டு நான் செய்த புகாரில் அந்த டீச்சரை வேலையை விட்டு நிறுத்தினாங்க. அந்த கோபத்தில் டீச்சரோடு போனவர்தான் என்னுடன் சேர்ந்து வாழ வரவே இல்லை. அந்த டீச்சரையும் இங்கு கூட்டி வர துடிக்கிறார்.

சேரனும் சினேகாவும் சொன்னா இவர் கேட்பார்னு நினைச்சேன் அப்புறம் இந்த அசிங்கத்தை அவங்ககிட்ட சொல்லனுமான்னு சும்மா இருந்துட்டேன். அவரிடம் சரியானதொரு நடவடிக்கை இல்லை என்றால் அவரை விட்டு சட்டப்பூர்வமாக விவகாரத்து வாங்கி பிரிவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.