கூத்தன் என்ற  படம் தயாராகி வருகிறது ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கே.பாக்யராஜ், ஊர்வசி முதலானோர் நடித்துள்ள இப்படத்தை  ஏ.எல்.வெங்கி என்பவர் இயக்கியுள்ளார். படத்தை பற்றி அவர் கூறியதாவது
என்  மகன் ஹீரோவாக இப்படத்தில் அறிமுகமாகிறான். புதுமுகங்களின் படங்கள், சிறுபட்ஜெட் படங்கள் போன்றவையால் மக்களை படம் சென்று அடைவதில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது.
எனவே, என் படத்தின் டிக்கெட்டுகளை நண்பர்கள் மூலம் நேரடியாக விற்கும் திட்டத்தை செயல்படுத்த போகிறேன்.

குறைந்த கட்டணத்தில் டிக்கெட் வாங்கினாலும், அதை 9 நாட்களுக்குள் பெரிய தியேட்டர்களில் காட்டி படம் பார்க்கலாம். இதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். முதற்கட்டமாக 20 லட்ச ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறோம்’ என்றார்.