கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் குவாட்டரும், ஸ்கூட்டாரும் கொடுத்து ஓட்டு கேட்டால் அதை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் வேண்டும் என்று பேசினார்.

கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் யங் இண்டியன்ஸ், யுவா, இந்திய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து நடந்திய நடையேதும் இல்லை என்ற நிகழ்ச்சியானது கோவை கிருஷ்ணா கல்லூரியல் நடத்தின. இந்த விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி நிறுவனங்களின் உள்ளே என்னை அனுமதிக்க கூடாது என்று எழுதப்படாத ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படி உள்ள தடையை உடைத்து சரித்திரம் படைப்பேன். மாணவர்களுடன உரையாடுவதை எவருக்கும் உரிமையில்லை. அதுபோல மாணவர்களுடன் உரையாடுவதற்கு எனக்கு எந்தவித அரங்குகள் தேவையில்லை. வெட்டவெளி போதும். மேலும் நான் உங்கள் வயதில் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க பாஸ்-  இத்தனை மொழிகளில் வெளியாகிறதா இந்தியன் 2?

அதற்கு பின் மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசினார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அது என்னவென்றால், ஆண்டுதோறும் ஒரு கோடி மாணவர்கள் படித்து விட்டு வேலைக்கு ரெடியாக உள்ளனர். எந்தவொரு நிறுவனத்தையும், அரசு வேலையையும் சார்த்திருக்காமல், மாணவர்களே நீங்களே ரெடியாகவே முதலாளியாக மாறி, நூறு பேருக்கு வேலையளிக்கும்படி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க பாஸ்-  நான்கு அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும்-ராஜேந்திர பாலாஜி ஆருடம்

இளைஞர்களால் தான் அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியும். அதுமட்டுமில்லை லஞ்சத்தை, ஒவ்வொருவரும் வாங்குவதையும், கொடுப்பதை நிறுத்தினால் தான் அறவே ஒழிக்க முடியும். மக்களுக்கு ஓட்டு பதில் குவாட்டரும், ஸ்கூட்டரும் கொடுத்தால் ஓட்டை வாங்கி விடலாம் என்று மன கணக்கு போட்டு வைத்துள்ளார்கள். அதனால் அதை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு வர வேண்டும் என்று பேசினார்.

இதையும் படிங்க பாஸ்-  யாருடன் கூட்டணி - கமல்ஹாசன் அதிரடி பேட்டி

தலைமைசெயலகம் முதல் சிறை வரை ஊழல் பரவி கிடக்கிறது என்றும், இடைத்தேர்தலை பார்வையிடுவோம், கலந்து கொள்ள மாட்டோம். உன்னிப்பாக கவனிப்போம். விமர்சிப்போம். லோக்சபாவுக்கு போட்டியிட தயாராகி வருகிறோம். ஏழுபேர் விடுதலை, சட்ட விவகாரம். இவ்வளவு நாள் விட்டு விட்டு இப்போது வந்து அவசரப்படுத்தக் கூடாது. எது நியாயமோ அதை கவர்னர் செய்யட்டும். யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் விமர்சிக்கக்கூடாது என்று கூறினார்.