சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் அவர் சந்தித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த கண்ணன் என்ற கண்டக்டர் ரஜினியை சந்திக்க கண்டக்டர் சீருடையில் வந்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  முடியும் நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு..

கோவை போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவர், முன்னாள் கண்டக்டர் ரஜினியை சந்தித்தது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

கண்ணன் இன்னைக்கு கலக்கல் கண்ணன் ஆகிட்டாரு, வாழ்த்துக்கள் என ரஜினி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.