மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்கி இருப்பார் என இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா டுவிட்டர் மூலமாக கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என பலத்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதாவின் அதிரடியை கையிலெடுக்கும் எடப்பாடி: கிலியில் ஆறு அமைச்சர்கள்!

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மரணமடைந்தார். அவரை அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுகவினர் எடுத்த முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்த விசாரணை இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை தலைமை பொறுப்பு நீதிபதி முன்பு வர உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  திமுகவிற்கு செல்கிறேனா? - தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்

இந்நிலையில் பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சசிகலாவின் உறவினரான கிருஷ்ணப்பிரியா, அம்மா உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக , திரு கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே , தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.