நடிகர் அஜீத் அப்பாவாக நடிக்க வேண்டியவர் என பாலிவுட் நடிகரும், சினிமா தயாரிப்பாளர் மற்றும் விமர்சகரான கே.ஆர்.கே அடித்துள்ள கிண்டல் அஜீத் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

பாலிவுட்டில் நடிகராகவும், சினிமா தயாரிப்பாளராகவும், சினிமா விமர்சகராகவும் இருப்பவர் கே.ஆர்.கே (கமால் ரஷீத் கான்). இவர் எப்போதும் பாலிவுட் ஹீரோக்களை தூக்கி பிடித்தும், தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கும் ஹீரோக்களை கிண்டலத்தும் தனது டிவிட்டர் பக்கங்களில் சர்ச்சை கருத்துகள் தெரிவித்து வருகிறார்.

மோகன்லாலை சோட்டா பீம் என விமர்சித்து, அதன் பின் மன்னிப்பு கேட்டார்.  பாகுபலி-2 ஒரு மொக்க படம் என டிவிட் போட்டார். அதன்பின், அப்படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது எனக் கூறினார்.

இந்நிலையில், தற்போது நடிகர் அஜீத்தை பற்றி கிண்டலாக ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அஜித் நடித்த விவேகம் படம் இன்று நாடெங்கும் வெளியாகியுள்ளது. அப்படத்தினை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல நாட்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கே.ஆர்.கே. தனது டிவிட்டர் பக்கத்தில் “ அஜீத், உங்களைப் போன்ற தோற்றம் கொண்டவர்கள் பாலிவுட்டில் தந்தை வேடத்தில் நடித்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் ரசிகர்கள் உங்களை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.. விவேகம் படத்திற்கு என் வாழ்த்துக்கள்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.