தெலுங்கில் ரீமேக்காகும் குரங்கு பொம்மை

Bharathiraja, Vidharth in Kurangu Bommai Movie Stills
Bharathiraja, Vidharth in Kurangu Bommai Movie Stills

விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1-ந் தேதி வெளிவந்த ‘குரங்கு பொம்மை’ படம் ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் விதார்த்தின் தந்தையாக நடித்த பாரதிராஜாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ் போக்கஸ் என்ற நிறுவனம் இதற்கான உரிமையை பெற்றுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

‘குரங்கு பொம்மை’ படம் பணம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட அசாதாரண முடிவுகளை எடுக்க வைக்கிறது என்பதை கிரைம் திரில்லர் பாணியில் சொல்லியிருந்தது. இப்படத்தை நிதிலன் என்பவர் இயக்கியிருந்தார். அஜ்னேஷ் லோக்நாத் இசை அமைத்திருந்தார்.