நடிகை ஜெயப்பிரதா பற்றி மிகவும் தரக்குறைவாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சி ராம் ஆசாத்தை காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜெயப்பிரதா. ராம்பூர் தொகுதியில் 10 வருடங்களாக அவர் எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதே தொகுதியில் சமாஜவாதி கட்சி சார்பாக ராம் ஆசாத் போட்டியிடுகிறர்.

சமீபத்தில் பிரச்சார மேடையில் பேசிய ராம் ஆசாத் “ஜெயப்பிரதாவை இந்த தொகுதிக்கு அழைத்து வந்ததே நான்தான். அவரை யாரும் தொட நான் அனுமதிக்கவில்லை. நீங்கள் அவரின் உண்மையான முகத்தை பார்க்க 17 வருடங்கள் ஆனது. ஆனால், 17 நாட்களில் அவர் காக்கி நிற உள்ளாடை அணிகிறார் என்பதை தெரிந்து கொண்டேன்” எனப் பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.