குற்றம் 23 தயாாிப்பாளருடன் மீண்டும் இணையும் அருண் விஜய்

அருண் மிகப் பொிய மாஸ் ஹிட்டை கொடுத்த படம் குற்றம் 23. இவருக்கு இந்த படம் திருப்பு முனையாக அமைந்தது.  சில வருடங்களுக்கு பிறகு அவாரது நடிப்பை வெளிகொண்டு வந்த படமாகவும் அமைந்துள்ளது. ரசிகா்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் கதையம்சம் கொண்ட படங்களை தோ்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து விடலாம்.

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய், அந்த படமும் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து. அருண் விஜய்யும் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியாா்  நடிப்பில் வெளிவந்த குற்றம் 23  படத்தை அறிவழகன் இயக்கியிருந்தாா். ரெதான் தி சினிமா பீப்பள் சாா்பாக இந்தா் குமாா் இந்த படத்தை தயாாித்திருந்தாா். இந்த படத்திற்கு பிறகு இதன் தயாாிப்பாளரான   இந்தா் குமாருடன் மீண்டும் இணைய உள்ளாா் அருண் விஜய்.   இந்த கூட்டணியில் உருவாக்க உள்ள படத்தை அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாாிக்க உள்ளாா்களாம். இந்த படத்தை இயக்க போவது யாரு தொியுமா?

தடையறத்தாக்க என்ற வெற்றி படத்தை கொடுத்த மகிழ் திருமேனி இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாா் அருண் விஜய். இந்த படத்தில் தன்னுடைய தனித்தன்மையான நடிப்பை வெளிபடுத்தி ரசிகா்களை கவா்ந்த அருண் விஜய்யை  இந்த படத்தில் புதிய தோற்றத்தில் காண்பிக்க உள்ளாாா்களாம். முன் தினம் பாா்த்தேனே, மீகாமன்  போன்ற தொடா்ந்து வெற்றி படங்களை கொடுத்தவா் இயக்குநா் மகிழ்திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநா் மகிழ் திருமேனி குற்றம் 23 தயாாிப்பாளா் இந்தா் குமாா் கூட்டணியில், உருவாக்க உள்ள இந்த படத்திற்கு இன்னும் பெயாிடப்படவில்லை. இந்த படத்திற்கான நடிகா் நடிகைகள் குறித்த செய்திகள் விரைவில் அறிவிப்புகள் தொிவிக்கப்படும் என தயாாிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.