சிறுவயதில்  குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு பல படங்களில் பலவிதமான வேடங்களை ஏற்று தமிழக மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஒரு கட்டத்தில் டிவி சீரியல்களை தயாரிக்க தொடங்கினார் இவரது கணவர் பிரபு நேபால் இவரும் சேர்ந்து டிவி சீரியல்களை தயாரித்தனர்.

இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசியுள்ள குட்டி பத்மினி ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்புகளை கொடுக்க நாங்கள் தயார் என தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் திரைத்துறையில் இன்றைக்கு மட்டுமல்ல எண்பதுகள் காலம் தொட்டே இது போல நடக்கிறது என பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.