பிரபல இயக்குனர் கே.வ்.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சமீபத்தில் இணையதளங்களை கலக்கிய ப்ரியாவாரியர் ஹீரோயினியாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஆனால் இந்த செய்தியை இயக்குனர் கே.வி.ஆனந்த் மறுத்துள்ளார். ப்ரியாவாரியரை இந்த படத்தில் நடிக்க நாங்கள் முடிவு செய்யவில்லை என்றும் இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் தான் நாயகி என்றும் அவரது பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் அதிரச்சி அடைந்துள்ளனர்

மேலும் சூர்யா நடித்து வரும் NGK திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படம் குறித்த முழு தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.