இரண்டே நாளுக்கு ரூ.5 கோடி: உச்சத்திற்கு சென்ற நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர்  நயன்தாரா. இவர் அறிமுகமானபோது வந்த மற்ற நடிகைகள் பீலவுட் ஆகிவிட்டனர். ஆனால் நயன் தாராவுக்கோ வயது ஏற ஏற அவரது மார்க்கெட்டும் ஏறிக்கொண்டே உள்ளது. தற்போது நடிகைகளில் அதிக ஊதியம் பெறும் நடிகை நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடித்த டிடிஎச் விளம்பரம் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த விளம்பரத்தில் நயன்தாராவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.5 கோடியாம். அதுவும் அந்த விளம்பரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தாராம். இரண்டு நாட்களுக்கு 5 கோடியா என்று மற்ற  நடிகைகள் மயங்காத குறையாக பேசிவருகின்றனராம்.