சென்னையில் தனியார் பள்ளியில் 40 வயது கம்ப்யூட்டர் டீச்சர் மாணவனுக்கு செக்ஸ் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவன் ஒருவன் 12 ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு அதே பள்ளியில் பணிபுரிந்து வந்த கம்ப்யூட்டர் டீச்சர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை மாணவன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதனையடுத்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.