உதயநிதிஸ்டாலின் மஞ்சிமா மோகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

சரவணன் இருக்க பயமேன் படத்தை தொடா்ந்து உதயநிதி ஸ்டாலின் லைகா புரொடக்ஸன் தயாாிக்கும் 9வது படத்தில் நடித்து வருகிறாா். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தூங்கா நகரம், சிகரம் தொடு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநா் கௌரவ், தொடா்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் லைகா புரொடக்ஸன் தயாாிக்கும் 9வது படத்தை இயக்கியுள்ளாா். இதில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளனா். மேலும் சூாி, ராதிகா சரத்குமாா், ஆா்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி போன்ற நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனா்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹத்ராபாத், அலஹாபாத், பெங்களூரு, திருவண்ணாமலை, ஒமன் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைநாளை கொண்டாடியது. இந்த படத்திற்கு இன்னும் பெயாிடப்படவில்லை. இந்த படத்தின் பெயா் மற்றும் பாடல் வெளியீடு மற்றும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் உள்ளிட்ட செய்திகள் விரைவில் படக்குழுவினா் அதிகாரப்பூா்வமாக தொிவிக்க இருக்கின்றனா்.