ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவர் வித்யாபாலன் நடித்த துமாரி சுளு’ என்ற பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்

ராதாமோகன் இயக்கவுள்ள இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது லட்சுமிமஞ்சு இணைந்துள்ளார். இவர் ஜோதிகா வேலை செய்யும் எப்.எம்.ரேடியோவில் உயரதிகாரியாக நடிக்கவுள்ளாராம்

மேலும் நடிகை லட்சுமி மஞ்சு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் தமிழில் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.