lakshmi menon

கும்கி படத்தின் அறிமுகமான லட்சுமி மேனன் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்த்தால் சில காலம் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய் விட்டார். சிறிது இடைவெளிக்கு பிறகு தற்போது யங் மங் சங் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கும் லட்சுமி மேனன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தான் தனது விருப்பம் என்று கூறி பரபபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகை லட்சுமி மேனன் 15 வயதில் கும்கி படத்தின் மூலம் நடிக்க வந்து அனைவராலும் அதிகம் பேச பட்டவர். அதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கார்த்தியுடன் கொம்பன், விஷால், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி என ஒரு ரவுண்டு கட்டி அடித்தவா் திடீரென சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் சினிமாவில் யங் மங் சங் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன் பிரபுதேவா ஜோடியாக நடித்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியில் திருமணம் பற்றி கேட்டதற்கு, எனக்கு திருமண உறவில் எல்லாம் நம்பிக்கையில்லை. எல்லாரும் நினைப்பது போல திருமணம் மூலம் தான் அன்பு, காதல் கிடைக்கும் என்று இல்லை.

அன்பு காதல் எல்லாம் திருமணம் செய்யாமல் கூட பெற முடியும். நான் இப்படி சொல்வது மற்றவர்களுக்குப் புரியுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது எனக்கு மட்டும் புரிந்த வி‌ஷயம். நான் திருமணத்தை நம்பவில்லை.

yung mung sung

நான் திருமணம் செய்து கொள்ளவும் மாட்டேன். அதனால் எனது வாழ்க்கையில் துணை என்று ஒருவா் இருக்கமாட்டார் என்று சொல்லவில்லை. கண்டிப்பாக எனக்கும் வாழ்க்கை துணை இருப்பார். நம்முடைய வாழ்க்கை துணையாக இருப்பார் அந்த துணை என்ற வார்த்தை அர்த்தம் சேர்க்கும் நபராக இருக்க வேண்டும். நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபராக இருக்க வேண்டும். அதனால் அதை கல்யாணம் என்று ஒரு வரியில் அடைக்க விருமபவில்லை. அதற்காக நான் சொல்லும் இந்த வாழ்க்கையை லிவிங் டு கெதர்’னு கூட சொல்லமுடியாது என்று தைரியமாக கூறி இருக்கிறார். அதோடு அவர் வாழ்க்கையில் அனுபவம்தான் சிறந்த ஆசிரியர் என்று சொல்வேன்.

நான் இப்படி திருமணம் பற்றி கூறியது, அனுபவத்தால் மட்டுமே வந்தது இல்லை. அதை எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்