இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனருக்கு சவால் விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

ஹர ஹர மஹாதேவகி படத்தை எடுத்த இயக்குனரின் அடுத்த படைப்பு இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு எதிராக பலரும் கண்டனங்கள் எதிர்த்து வருகின்றன. சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட இந்த மாதிரி கலாசார சீரழிவு படங்களை திரையிட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் இருட்டு அறையில்  முரட்டுக்குத்து இயக்குனருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவர்களுக்குமிடையில் சொற்போர் நிகழ்ந்து வருகிறது.

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அண்மையில் வெளியான இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக பேசியிருந்தார். தமிழக கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனரை இனிமேல் படம் இயக்குவே விடக்கூடாது என்னும் வகையில் பேட்டி அளித்திருந்தார்.

எனினும் இதுகுறித்து எதிர் கருத்து தெரிவித்த இயக்குனர் சந்தோஷ், என்னை பற்றி இவ்வளவு பேசுகிறீர்கள். அது இருக்கட்டும். நீங்கள் ஏன் இத்தனை காவல் நிலையங்களும், நீதி மன்றங்களும் இருக்கின்ற நிலையில் குடும்ப பிரச்சனைகளை பற்றி பேசுகிறீர்கள். இந்த அதிகாரத்தை யார் உங்கள் கையில் கொடுத்தது? இந்த மாதிரி நிகழ்ச்சிகளை குழந்தைகளும் பார்ப்பார்கள் என்பது பற்றி உங்களுக்கு தெரியாதா என்ன? என்று அவருக்கு எதிரடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பதிலளிக்கும் வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு வீடியோவில் பேசியுள்ளதாவது, செக்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படும் விதமாக நீங்கள் படம் எடுக்கவில்லை. அந்த படத்தில் தமிழ் கலாசாரத்தை கொடுக்கும் விதத்தில் முழுக்க முழுக்க வக்கிர புத்தியே காட்டப்பட்டுள்ளது. நீங்கள் என்னுடன் வாருங்கள். பெண்களை சந்திப்போம். நான் என்னுடைய நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒளிபரப்புகிறேன். நீங்கள் உங்கள் படத்தை திரையிடுங்கள். யாருக்கு அதிக மரியாதை கிடைக்கிறது என்று பார்ப்போம். அப்போது மக்கள் என்னை செருப்பால் அடித்தால் கூட வாங்கிக் கொள்ள நான் தயார். தமிழகத்தை விட்டே சென்று விடுகிறேன். என்னுடன் வர நீங்கள் தயாரா? என சவால் விடும் வகையில் அந்த வீடியோவில் உள்ளது.