சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமக்கிருஷ்ணன் பிரபல மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மீடூ என்னும் இயக்கம் மூலம் பெண்கள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் சிக்கல்களை தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். அந்த வகையில் ஏராளமான சினிமா நடிகைகள் பல முக்கிய புள்ளிகள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். சமீபத்தில் கூட சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமக்கிருஷ்ணன் இந்த இயக்கத்திற்கு தனது  ஆதரவை தெரிவித்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவரே பிரபல மலையாள இயக்குனரான ஹரிஹரன் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். ஹரிஹரன் இயக்கிய பழசிராஜா படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அந்த படத்தின் பூஜைக்கு சென்ற என்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். உடனடியாக அவரை கண்டபடி திட்டிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன் என லட்சுமி ராமக்கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த புகார் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.