கோலிவுட் திரையுலகமே ‘அருவி’ படத்தை பாராட்டி வரும் நிலையில் இந்த படத்தை ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தி வரும் லட்சுமி ராமகிருஷ்ணனும் பாராட்டியுள்ளார்

‘அருவி’ படத்தில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற நிகழ்ச்சியின் காட்சிகள் உள்ளது. அதில் டிஆர்பிக்காக தொலைக்காட்சியினர் செய்யும் வேலைகள் தோலுரித்து காட்டப்பட்டிருக்கும்

இதையும் படிங்க பாஸ்-  ஜெயலலிதா வேடம்: என்னால் முடியாது என மறுத்த கீர்த்தி சுரேஷ்!

இந்த நிலையில் இந்த படத்தை கண்டிப்பாக லட்சுமிராமகிருஷ்ணன் எதிர்ப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ‘அருவி’ படத்தை அவர் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார். என் நிகழ்ச்சியை கேலி செய்தாலும் இது நல்ல படமே’ என்று கூறியுள்ளார்.