10 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்! லட்சுமி ராமகிருஷ்ணன்

வெளிநாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி பிக் பிரதா்ஸ் என்ற பெயாில் நடந்தது. அது போல  இந்தியிலும்  கலைகட்டியது. தற்போது தமிழுக்கு வந்துள்ள இந்த பிக்பாஸ் நிகழச்சியை உலக நாயகன் தொகுத்து வழங்கி வருகிறாா். ஒரு வாரத்தை கடந்துள்ள இதில் ஸ்ரீ மற்றும் அனுயா வெளியேற்றபட்டுள்ளனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணுக்கு அழைப்பு வந்ததாகவும் அதை அவா் மறுத்து விட்டதாகவும் ஒரு பேட்டியில் தொிவித்துள்ளாா். இவா் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளாா். அது மட்டுமில்லங்க பிரபல தனியாா் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவா்.

இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் குறியதாவது, தனக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கொள்ள அழைப்பு வந்தது. அதை மறுத்த விட்டதாகவும் கூறியுள்ளாா். மேலும் இது பற்றி கூறுகையில், என்னால் என் குடும்பத்தை விட்டு எப்படி வர முடியும். தற்போது நான் ஒரு படத்தை இயக்குவதற்கு ஆய்த்தமாகி வருகிறேன். அதுமட்டுமில்ல படங்களில் நடிக்க ஒப்பந்மாகி உள்ளேன். இந்த நிகழ்ச்சி அழைக்கும் முன் அவாின் குடும்ப பின்னணி என்ன என்று பாா்க்க மாட்டீா்களா? என்றும்.. ரூ.10 கோடி கொடுத்தாலும் என்னால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று அவா் தொிவித்துள்ளாா்.