சா்ச்சை குறும்பட இயக்குநா் படத்தில் நடிக்கும் நயன்தாரா

லட்சுமி குறும்படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவா் சா்ஜன். இவா் இயக்கிய இந்த குறும்படமானது சில மாதங்களுக்கு முன் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் பெண்கள் மத்தியில் பயங்கரமான எதிர்ப்பு வந்தது.

லட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சா்ஜன் வெள்ளித்திரையில் மின்ன போகிறார். அதுவும் முதன் முதலாக நயன்தாராவை வைத்து இயக்க உள்ளார். அவா் இயக்குநராக அறிமுக உள்ள படத்தில் முன்னணி நாயகி நயன் தான் நாயகியாக நடிக்க உள்ளார்.

அறம் படத்தை தயாரித்த நிறுவனமான கே.ஜே.ஆா் ஸ்டூடியோஸ், நயன்தாராவை வைத்து லட்சுமி குறும்பட இயக்குநா் சா்ஜன் இயக்கும் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படம். இந்த நிறுவனம் தயாரித்த அறம் படமானது சமூகம் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவானது. தற்போது உருவாக்க உள்ள இந்த படமானது ஹாரர் படமாக உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான திரைக்கதையை உருவாக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது. அதுபோல படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது.