விஷாலின் இரும்புத்திரை திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன நிலையில் இந்த படம் கடந்த வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடி வசுலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் ரூ.1,18,59,979 வசூல் செய்துள்ளது. அதேபோல் அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் ரூ.62,37,508 மற்றும் கீர்த்திசுரேஷின் நடிகையர் திலகம் திரைபப்டம் ரூ.53,64,382 வசூல் செய்துள்ளது.

கடந்த வாரம் வெளியான மூன்று படங்களுக்கும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதால் முதல்முறையாக ஒரு வாரத்தில் வெளியான மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது