அமிதாப் பச்சன், ஜெயா பச்சன, ஷாருக்கான், கஜோல், ரித்திக் உள்ளிட்டோர் நடித்த கபி குஷி கபி கம் படம். இந்த படத்தில் இடம்பெற்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். அந்த பாடலை இயக்குனர் கரண் ஜோஹார் ஒரு குறும்படத்தில் தவறான காட்சிக்கு பயன்படுத்திய காரணத்தால் அவர் மீத லதா மங்கேஷ்கர் குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

kiara advani

ஷாருக்கான மற்றும் கஜோல் நடித்த கபி குஷி கபி கம் படமானது சூப்பர் ஹிட் அடித்த படம். அந்த படத்தில் லதா மங்கேஷக்ர் பாடிய பாடலான கபி குஷி கபி கம் அனைவரது பாராட்டையும் பெற்று மிகவும் பிரபலமானது. இந்நிலையில் கரண் ஜோஹார் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற பெயரில் ஒரு குறும் படத்தை நெட் ஃபிளிக்ஸில் வெளியிட்டார். அந்த படத்தில் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். அவரது கணவா் படுக்கையில் திருப்பதி படுத்த இயலாத காரணத்தால் கியாரா சுயஇன்பத்தை நாடும் போது பின்னணி இசையில் லதா மங்கேஷ்கர் பாடிய கபி குஷி கபி கம் பாடலை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு லதா குடும்பத்தினர் கரண் ஜோஹார் மீது கடும்கோபத்தில் உள்ளனர். பஜனை போன்று மதிக்கும் ஒரு பாடலை ஒரு பெண் சுயஇன்பம் செய்வதற்கு போய் பயன்படுத்துவது சரியா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

lata mangeshkar

கபி குஷி கபி கம் பாடலை லதா பாடி முடித்தபோது இயக்குனர் கரண் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்தார் என்பது இன்றும் நினைவிற்கு வருகிறது. தனது கனவு நிறைவேறிவிட்டதாக கூறினார் கரண் ஜோஹார் அப்படி இருக்கும் போது இப்படி ஏன் நடந்து கொண்டுள்ளார் என்று லதாவின் குடும்ப உறுப்பினா் கேள்வி கேட்டுள்ளார்.

vicky kaushal

இப்படி லதாவின் பாடல் தவறாக பயன்படுத்திய செய்தியை அவரிடம் தெரிவிக்கவில்லை. அவர் மிகவும் வருத்தப்படுவார். கரண் வேறு பாடலை பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளனா் லதா உறவினா்கள். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற குறும்படத்தில் கியா அத்வானியும் அவரது கணவராக விக்கி கவுஷலால் நடித்துள்ளனர். இதில் கியா அத்வானி ஆசிரியைாக நடித்துள்ளார்.