பாபா பட காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் பாமக தலைவர் ராமதாஸ் அணியினருக்கும் நித்தம் ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது .

ரஜினி சிகரெட் பிடிக்க வேண்டாம் என கடும் பிரச்சினைகள் கிளம்பவே, அவர் நடித்த சந்திரமுகி படத்தின் ஓப்பனிங் சீனில் ரஜினி அவர்கள் பபிள்கம்மை தூக்கி போட்டு பிடிப்பது போல நடித்தார்.

இருந்தாலும் அவ்வப்போது ரஜினியின் குடும்பத்தை பாமகவினர் தொடர்ந்து சீண்டி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டில் வெட்கமே இல்லையா என லதா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்துக்காக வாங்கிய கடனை திருப்பி அளிக்காமல் இருப்பதற்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கு யாருக்கும் வெட்கமில்லை! கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2 முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாக கூறி விட்டு இப்போது மறுப்பதை ஏற்க முடியாது. இது குறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆவேண்டும் என கூறியுள்ளார்.