லதா ரஜினிகாந்த் தன் போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும் பிப்ரவரி 10 மற்றும் 12ம் தேதிகளில் பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு அஷ்வின் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.இவர்களுக்கு தேவ் என்ற மகன் உள்ளார்.பின் 2017ஆம் ஆண்டு இவ்விருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தற்போது சௌந்தர்யா, கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் சகோதரரும், தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன்  விசாகனும் காதலித்து வந்தனர். இவர் வஞ்சகர் உலகம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். விசாகனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடதக்கது. நடிகர் ரஜினிகாந்த்  இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததுடன் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம்  நடந்து முடிந்தது.

இந்நிலையில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் வருகின்ற பிப்ரவரி 10 மற்றும் 12 தேதிகளில் இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.மேலும் இந்த திருமண விழாவிற்கு திரைத்துறை பிரபலங்கள்,கலைஞர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் என பலரும் வருகை தரவுள்ளனர்.

இதனால் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் தன் போயஸ் கார்டன்  வீட்டுக்கு வரும் பிப். 10 மற்றும் 12ம் தேதிகள் போலீஸ் பாதுக்காப்பு கேட்டு காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.