லதா ரஜினிகாந்த் பள்ளிக்கு பூட்டு போட்டது ஏன்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வந்த பள்ளிக்கு கடந்த சில மாதங்களாக வாடகை கட்டணம் சரிவர கட்டவில்லை என்று பள்ளி கட்டிடத்தின் உரிமையாளர் புகார் கொடுத்ததாகவும், தொடர்ந்து வாடகைப்பணம் செலுத்ததாக காரணத்தினால் பள்ளி கட்டிடத்திற்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பள்ளி கட்டிடத்திற்கு சரியான முறையில் வாடகை செலுத்தி வருவதாகவும், வாடகை செலுத்தாததால் பூட்டு போடப்பட்டது என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் லதா ரஜினி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இந்த நிலையில் பூட்டு போட்டதால் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் தற்காலிகமாக வேளச்சேரியில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது