தமிழ் திரையுலகில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் ரஜினிகாந்த்.மேடைக்கு மேடை எம்ஜிஆரையும் புகழ்ந்து பேசி வருவது நமக்கு தெரிந்ததே. தற்போது அவர் அரசியலிலும் பிஸியாக உள்ளார்.ரஜினி குறித்து ஒரு வதந்தி எப்போதும் உண்டு. அதாவது நடிகை லதாவை அவர் ஒருதலையாக காதலித்ததாகவும், ஒருகட்டத்தில் எல்லை மீறியதால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் ரஜினியை ராமவரம் தோட்டத்தில் அழைத்து அடித்ததாகவும் ஒரு வதந்தி நீண்ட காலமாகவே உலவி வருகிறது.

இந்த நிலையில் நடிகை லதாவிடம் பேட்டி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் இது குறித்து கேட்டார். அப்போது அதற்கு பதிலளித்த லதா, ரஜினி நல்ல மனிதர்.அவர் மீது வேறு எந்த குறையும் சொல்ல முடியாது. அதனால்தான் இப்படி அவர் மீது வதந்தி பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.