ஸ்ரீரெட்டியின் புகார்: என்ன சொல்கிறார் லாரன்ஸ்?

sri reddy

சில நாட்களுக்கு முன் நடிகை ஸ்ரீரெட்டி, பல நடிகர்கள் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததாக போராட்டம் நடத்தினார். தினமும் ஒரு நடிகர் அல்லது இயக்குனர் பெயரை வெளியிட்டு அவர்களது லீலையை வெளிபடித்து வந்தார். ஆனாலும் எந்த நடிகரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

இரண்டு நாட்கள் முன்பு ஏ.ஆர் முருகதாஸ்,ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸை கூறி இருக்கிறார். ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார்.

அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன். ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதியை உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பதிலளித்த நடிகர் லாரன்ஸ் கூறுகையில், அது உண்மையில்லை. நான் தெலுங்கு படங்களுக்கு பணியாற்றியே ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. தேவையில்லாமல் அவதூறு பரப்பும் ஸ்ரீரெட்டிக்கு பதிலளிப்பது என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்வதாகும் என்று கூறினார்.