பிரபல நடிகை லக்ஷ்மி ராய் கைவசம் ‘சின்ட்ரெல்லா, நீயா 2, Where is The Venkatalakshmi’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இதில் ‘Where is The Venkatalakshmi’ என்ற தெலுங்கு படத்தை கிஷோர் குமார் இயக்கி வருகிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பூஜிதா, கார்த்திக், பிரவீன், மது நந்தன், பிரம்மாஜி ஆகியோர் நடிக்கின்றனர். ‘ABT கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதற்கு ஹரி கௌரா இசையமைக்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இரண்டு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை லக்ஷ்மி ராய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட கவர்ச்சியில் லக்ஷ்மி ராய் இடம்பெறும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.