கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களின் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் ஐ.வி.சசி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு திரையுலகினர் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

69 வயதான இயக்குனர் ஐ.வி.சசி கடந்த 1968ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்தார். சுமார் 150க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களை இயக்கிய ஐ.வி.சசி, தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘காளி’, கமல்ஹாசன் நடித்த ‘குரு’, இருவரும் இணைந்து நடித்த ‘அலாவுதீனும் அற்புத விளக்கும், ஜெய்சங்கர் நடித்த ‘ஒரே வானம் ஒரே பூமி, ‘சிவகுமார் நடித்த ‘இல்லம்’, ஸ்ரீதேவி நடித்த ‘பகலில் ஓர் இரவு’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய சுமார் 30 படங்களில் நாயகியாக நடித்த சீமா இவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சசி-சீமா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.