வாரணாசியில் உள்ள சிவன் கோயிலில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்ட நிகழ்வு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச்சேர்க்கை இப்போது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் கூட சட்டப் பிரிவு 377-ல் திருத்தம் செய்யப்பட்டு, ஓரின காதல் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து பொது சமூகமும் LGBT சமூகத்தை இப்போது சாதாரணமாக எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து வாரனாசியில் நேற்று, வாரணாசியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சிவன் கோவிலில், இருப் பெண் காதலர்கள் திருமணம் செய்துகொண்டனர். பெண்கள் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம், சமூக வலைத்தளத்தில் பரவவே இந்துத்வவாதிகள் கோயிலின் மகிமைக் கெட்டுப்போய்விட்டதாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணத்துக்கு ஆதரவாகவும் குரல்கள் இணையத்தில் எழ ஆரம்பித்துள்ளன.