LG X2 (2019) Launched – எல்ஜி நிறுவனம் எல்ஜி எக்ஸ் 2 (2019) என்ற தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

எல்ஜி நிறுவனம் கடந்த ஆண்டு எல்ஜி எக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது தென் கொரியாவில் எல்ஜி எக்ஸ் 2 (2019) என்ற தனது புதிய படைப்பை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி எக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் மேம்பபட்ட பதிப்புதான் எல்ஜி எக்ஸ் 2 (2019).

இந்த ஸ்மார்ட்போன் விரைவில் மற்ற நாடுகளிலும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பமசங்கள் பற்றின விவரம் பின்வருமாறு…

# 720 x 1440 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 அளவிலான திரை விகிதத்தை கொண்ட 5.45 இன்ச் எச்டி+ ஃபுல்விஷன் டிஸ்ப்ளே
# 2 ஜிபி ரேம் உடனான மிகவும் பழைய 1.4GHz ஸ்னாப்டிராகன் 425 SoC கொண்டு இயங்குகிறது
# மைக்ரோ எஸ்டி வழியாக 2TB வரை மெமரி விரிவாக்கும்
# பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா
# செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்கான 5 மெகாபிக்சல் கேமரா
# 3,000 எம்ஏஎச் பேட்டரி

இதன் விலை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.11,500க்கு அறிமுகமாகலாம். அரோரா பிளாக் எனும் ஒற்றை நிறத்தின் கிடைக்கும்.