சிம்புவின் நண்பர் மகத் பிக் பாஸ் 2 வீட்டில் அட்டகாசம் செய்துவிட்டு சென்றார். வெளியே காதலி இருக்கும்போதே பிக் பாஸ் வீட்டில் தங்கியபோது யாஷிகாவை காதலித்தார்.

அவரும், யாஷிகாவும் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.  யாஷிகாவை கூலாக மகத் கட்டிப்பிடித்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  சிவாஜி குடும்பத்து மருமகளான பிக்பாஸ் நடிகை!

பியா பாஜ்பாயுடன் மகத் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் பேக் பெஞ்ச் ஸ்டூடண்ட். 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான அந்த படத்தில் மகத், பியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருப்பார். அந்த முத்த புகைப்படம் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க பாஸ்-  கமல் படத்தில் நடித்ததற்காக வேதனைப்பட்ட ஓவியா

மகத் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதை பார்த்து காதலை முறித்துக் கொண்ட பிராச்சியை சமாதானம் செய்து தற்போது தான் எல்லாம் நல்ல படியாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த புகைப்படம் வைராலகியுள்ளது.

யாஷிகா விஷயத்தையே மன்னித்த பிராச்சி இந்த ரீல் முத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நம்பப்படுகிறது.