உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் நடந்த கோயில் நிகழ்ச்சியின் போது சாப்பாடு பொட்டலத்துடன் மது பாட்டிலும் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், ஷ்ரவன் தேவி கோயிலில் பாஜக தலைவர் நரேஷ் அகர்வாலின் மகன் நிதின் சார்பில் பாசி சமூகத்தினரின் சம்மேளனம் (கூட்டம்) நடந்தது. அதில், விவசாயிகள் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, அவர்களுக்கு சாப்பாடு பொட்டலத்துடன் கூடிய மது பாட்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்து பார்த்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கும் உணவு பொட்டலுத்துடன்  மது பாட்டிலும் கொடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.