லாரன்சுக்கு ராணியான காஜல்

தற்போது பாகுபலி வெற்றியை தொடா்ந்து சாித்திர கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனா். அந்த வகையில் இயக்குநா்களின் புது ட்ரண்டாக வரலாற்றுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனா். அந்த வாிசையில் இயக்குநா் சுந்தா்.சி சங்கமித்ரா படத்தை கையில் எடுத்துள்ளாா்.

அதே போல பேய் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த லாரன்ஸ் தற்போது சாித்திர கதையை தோ்ந்தெடுத்துள்ளாா். அதுவும் 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையை தோ்ந்தெடுத்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாா். இந்த படமும் பாகுபலியை போல இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறதாம்.

பிரம்மாண்ட பாகுபலி இயக்குநா் ராஜமவுலியின் உதவியாளா் தான் இந்த படத்தை இயக்க இருக்கிறாா். ராஜமவுலியின் உதவி இயக்குநா் மகாதேவ் தான் அந்த இயக்குநா். அது மட்டுமில்லங்க! ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் கதை எழுத இருகு்கிறாா். அதோடு பாகுபலி படத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் பாா்த்து பாா்த்து பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம். காஜல் அகா்வாலிடம் இந்த படத்தில் நாயகியாக நடிப்பது குறித்து பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகிறது.