Biggboss promo video – ஓவராக சத்தம் போட்டுக் கொண்டிருந்த நடிகை மதுமிதாவுக்கு லாஸ்லியா நோஸ்கட் கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் இன்றைய நிகழ்ச்சி தொடர்பான முதல் புரமோ வீடியோவில் சாண்டி மற்றும் கவினுடன் மதுமிதா சண்டை போடும் காட்சி இடம் பெற்றிருந்தது. இங்கு இருக்கும் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துகிறீர்கள். எங்களை பயன்படுத்துகிறீர்கள். வனிதா மேடம் கூறியது போல் பிக்பாஸ் வீட்டை கொஞ்ச நேரம் திறந்து வைத்தால் நான் முதலில் வெளியேறுவேன்’ என மதுமிதா கூறும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதைத் தொடர்ந்து அவருக்கும் சாண்டி, கவின் உள்ளிட்டோருக்கு இடையே வாக்குவாதம் எழுகிறது. அப்போது, அங்கு வரும் லோஸ்லியா ‘மக்களுக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களை மக்கள் வெளியே அனுப்புவார்கள். இது பற்றி நீங்கள் பேச வேண்டாம்’ என நோஸ்கட் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.