Bigg boss Losliya – பிக்பாஸ் வீட்டில் இருகும் லோஸ்லியாக சீசன் 2வில் பிக்பாஸ் வீட்டில் இருந்த ரித்விகாவை காப்பி அடிக்கிறார் என நெட்டிசன்கள் கூற தொடங்கியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3 வது நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 16 பேர் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கின்றனர். இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லோஸ்லியாவும் அடக்கம். நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்களே முடிந்து விட்ட நிலையில், சிலர் சமூகவலைத்தளங்களான முகநூல், டிவிட்டர் ஆகியவற்றில் லோஸ்லி ஆர்மியை தொடங்கினர். அதில், அவரது புகைப்படங்கள், பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் ஆகிய அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், அவர் பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு தான் வேலை உண்டு. தனக்கெதற்கு வம்பு என இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் யார் சண்டை போட்டாலும் அதை அவர் கண்டு கொள்வது இல்லை. யாரிடமும் அவ்வளவாக பேசுவது கூட இல்லை. சாப்பிடுவது, தூங்குவது, நடனம் ஆடுவதை தவிர எதுவுமே செய்யாத அவருக்கு ஆர்மி ஒரு கேடா என ஒரு பக்கம் நெட்டிசன்கள் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.

மேலும், 2வது சீசனில் பிக்பாஸ் வீட்டில் ரித்விகா இப்படித்தான் இருந்து போட்டியில் வெற்றி பெற்றார். எனவே, அதை மனதில் வைத்தே லோஸ்லியாக இப்படி நடந்து வருகிறார் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.