ஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்து பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் கடும் மன வருத்தத்தில் இருக்கின்றனர். இதன் வெளிப்பாடுகளை அவர்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

ஓவியாவின் வெளியேற்றம் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்தது இதுதான்:

ஆர்த்தி: கோடிக்கணக்கான மக்கள் வைத்த அன்பு வீணாகாது. ஓவியா டார்லிங் நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். நல்ல உடல்நிலை, அமைதியான நிலையை அடைய வாழ்த்துக்கள்

ஸ்ரீதிவ்யா: ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மன வலிமையுடன் இருங்கள் ஓவியா. நீங்கள் ஏற்கனவே அனைவரின் இதயத்தை வென்றுவிட்டீர்கள்

ஸ்ரீப்ரியா: ஓவியாவின் வெளியேற்றம் பெரும் மன வருத்தத்தை தருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலைமையில் ஓவியா வெளியேறுவது அவருக்கு ஒருவிதத்தில் நல்லதுதான். வெளியே அவருக்கு இருக்கும் ஆதரவை அவர் தெரிந்து கொண்டால் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு பெருமைப்படுவார்.

ரோபோ சங்கர்: பை பை ஓவியா, குட்பை பிக்பாஸ் தமிழ்

சதீஷ் (நடன இயக்குனர்): ஓவியா அனைவரிடமும் பேசி கொண்டிருந்தாலும் தனிமையில் இருப்பதை போல் உணர்ந்தார். எனவே அவர் வெளியேறியது அவரை பொருத்தவரையில் நல்ல முடிவுதான்