அன்பிற்காக ஏங்கிய மான் தீயணைப்பு பெண் வீரரை கட்டியணைத்து உருக்கம்

கனடாவின் பர்ன்ஸ் ஏரி அருகே முகாமிட்டிருந்த தீயணைப்பு படை வீரர்களை தெற்குப்பகுதியில் உள்ள ப்ரான் காய்ஸ் ஏரிக்கு அழைத்து செல்ல இருந்த போது இந்த வைரல் புகைப்படத்தை எடுத்ததாக தீயணைப்பு நிலைய பேருந்து ஓட்டுனர் தெரிவிக்கிறார்.

அங்கு நடந்து சென்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்களை பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மான் ஒன்று அவர்களை நோக்கி ஓடி வந்ததாம். அங்கிருந்த பெண் தீயணைப்பு வீரரை தழுவிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து பேருந்தில் ஏற முயற்சி செய்தது மனதுக்கு உருக்கமாக இருந்தது என அந்த பேருந்து ஓட்டுனர் கூறியுள்ளார் இதை பதிவிட்ட சில நிமிடங்களில் 2200 பேர் பகிர்ந்துள்ளனர் என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் மிக விரைவில் வைரல் ஆகியுள்ளது.