பிரிட்டனைச் சேர்ந்த 73 வயது தாத்தாவை 30 வயதாகும் அழகிய பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இங்கு வயதும் இல்லை. பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ்சைர் கவுண்டியின் மார்ச் நகரில் துணை மேயராக இருப்பவர் கிட் ஓவன் (73)இவருக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கிட் ஓவனின் மனைவி 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஐசா என்ற 30வயது அழகிய பெண்ணுடன் ஓவனுக்கு ஆன்லைன் சாட்டிங்கில் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் போன் நம்பரை பரிமாறிக்கொண்டு வாட்ஸ் அப் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஐசா தன்னை விட 43 வயது அதிகம் உள்ளவர் என்று பாராமல் ஓவனை காதலித்து வந்தார். இந்நிலையில் ஓவன் தன்னுடைய காதலியை சந்திக்க பிலிப்பைன்ஸ் சென்றார். அங்கு இருவரும் காதல் மழை பொழித்தனர். பின்னர் பிரிட்டன் வந்த அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் காதல் தம்பதிகள் முத்தம் கொடுத்து தங்கள் மகிழ்ச்சை வெளிப்படுத்தினர். இந்த திருமணத்தில் ஓவனின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.