தெலுங்கானாவில் பெற்றோர் எதிர்ப்பால் விஷம் குடித்து தற்கொலை முயன்ற காதல் ஜோடிக்கு மருத்துமனையில் இனதே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் விகரபாத்தைச் சேர்ந்த நவாஷ். மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா பேகம் ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த ரேஷ்மா பேகம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த நவாசும் பூச்சி மருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றொர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதையடுத்து, விகரபாத்தில், இருவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே, நவாஸ், ரேஷ்மா பேகம் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.