கோயம்பேட்டில் போலிஸார் மற்றும் கணவனிடம் சிக்கிய கள்ளக்காதல் ஜோடியினர் யாரும் எதிர்பார்க்காத விதமாக விஷ மாத்திரையைத் தின்று தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் மற்றும் கவிதாமணி தம்பதியினர். கவிதாமணிக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரோடு தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் இருவரும் ஊரைவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர். இது சம்மந்தமாக ஜெயக்குமார் நம்பியூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலிஸார் இருவரையும் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஜெயக்குமார் மற்றும் கவிதாமணி இருவரும் சென்னை, கோயம்பேட்டுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸ் அங்கே சென்ற போது ஜெயக்குமார் மட்டுமே இருந்துள்ளார்.  அவரிடம் விசாரித்த போது கவிதாமணி சேலத்துக்கு சென்றதாகவும் தற்போது திரும்பி வந்துகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் அவரை அழைத்துக் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்ற போலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் விஷ மாத்திரைகளை விழுங்கியுள்ளனர். இதனால் இருவரும் வாயில் நுரைதள்ளி இறந்துள்ளனர். அவர்களது உடல்களை போலிஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.