Loyola college Opinion of polls – சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்களவை தொகுதிகளில் திமுக அதிக இடங்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு இயக்கங்கள் நாடு முழுவதும் எந்த கட்சி அதிக இடங்களை பெறும் என கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளனர். அதன்படி தமிழகத்தில் திமுகவே அதிக இடங்களை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது.

தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 27 முதல் 33 மக்களவை தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 3 முதல் 5 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. மேலும், அமமுக கூட்டணி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறும்.

அதேபோல், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக 2 முதல் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 2 தொகுதி முடிவுகளை கணிக்க முடியாத நிலை உள்ளது எனவும் அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.