நான் ஏன் ஓவியாவைப் பற்றி பேச வேண்டும்? – கோபமான தாமரை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட ஜூலிக்கு எதிர்ப்புகளும், ஓவியாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆதவும் பெருகிவருகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி  திரையுலக பிரமுகர்களும் தங்கள் ஆதரவை சமூகவலைதளங்கள் மூலமாக தெரிவித்துவருகின்ன்றனர்.  கவிஞர் தாமரையும் ஓவியாவிற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சமூக வலைதளங்களில் பரவின.

இது குறித்து கவிஞர் தாமரை கூறியபோது, பிக்பாஸ் நிகழ்ச்சியை நானும்தான் பார்க்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு நான் அடிமை இல்லை.    ஓவியாவிற்கு ஆதரவாக நான் டுவிட்டரில் கருத்து வெளியான தகவல் தவறு.  பேஸ்புக்கில் மட்டுமே நான் உள்ளேன்.டுவிட்டர் அக்கௌண்ட் எனக்கு இல்லை.  ட்விட்டரில் என் பெயரில்  ஓர் அக்கவுன்ட்டை உருவாக்கி, அதில் நான் ஏதோ ஓவியாவுக்கு ஆதரவாகப் பேசியதாக  பதிவுசெய்துள்ளனர். நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது, நான் ஏன் ஓவியாவைப் பற்றி பேச வேண்டும்? என்று கூறினார்.