பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல்முறையாக இயக்குனராகி இயக்கியுள்ள படம் ‘மாயவன்’. இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும் அன்புச்செழியன் கொடுத்த சிக்கல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அன்புச்செழியன் தரப்பு இந்த படத்திற்கான ரெட்கார்டை விலக்கி கொண்டதால் இந்த படத்திற்கு ஏற்பட்டிருந்த சிக்கல் தகர்ந்தது. இதனையடுத்து இவ்வருடமே இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது.

இதன்படி தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்லது இந்த படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சந்தீப்கிஷான், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அக்சரா கெளடா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.