சிம்பு நடித்த உருப்படியான ஒருசில படங்களில் ஒன்று ‘விண்ணை தாண்டி வருவாயா. கவுதம்மேனனின் அபாரமான திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான இசை, த்ரிஷாவின் சொக்க வைக்கும் அழகு ஆகியவை இந்த படத்தின் சிறப்பு

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ள கவுதம் மேனன், சிம்புவுக்கு பதில் மாதவனை தேர்வு செய்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டர்களில் புனித் ராஜ்குமார், டொவினோ தாமஸ் நடிக்கவுள்ளனர்.

மீண்டும் ஜெஸ்ஸியாக த்ரிஷாவே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது