இனி அப்படி நடிக்க முடியாது – மாதவன் திட்டவட்டம்

01:03 மணி

Loading...

 அலைபாயுதே படத்தின் மூல அறிமுகம் ஆனவர் மாதவன்.  அந்த கால கட்டத்தில் தொடர்ந்து சாக்லேட் பாயாக வலம்வந்து, இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் இவர். பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார், இதனால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்தார். நீண்ட இடைவெளிக்கு பின் இறுதிச் சுற்று மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதில் அவருடைய வழக்கமான சாக்லேட் பாய் இமேஜை உடைத்து கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார். அதே போன்று சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் கலக்கியிருப்பார்.

இந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ள அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து வரும் மாதவன், இனிமேல் சாக்லேட் பாய் கேரக்டரில் நடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சாக்லேட் பாய் இமேஜை நான் கடந்துவிட்டேன். இப்போதும் காதலிப்பதாக, ரொமான்ஸ் செய்வதாக நடிக்க இப்போதும் நான் ரெடி. ஆனால், அது என் வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் இறுதிச் சுற்று, விக்ரம்வேதா படத்தில் வரும் காதல் சீன்கள் போன்று இருக்க வேண்டும் என்று கூறினார்.

(Visited 21 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com