Madhumitha angry in biggboss promo video – பிக்பாஸ் வீட்டிலிருந்து நான் வெளியேறுவேன் என நடிகை மதுமிதா கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின் பிக்பாஸ் வீடு பல களோபரங்களை சந்தித்து வருகிறது. அபிராமிக்கும், முகேனுக்கும் இடையே சண்டை மூட்டி விட்டார். அதைத் தொடர்ந்து சேரை எடுத்து அபிராமியை முகேன் அடிக்க பாய்ந்த காட்சிகள நேற்று வெளியானது.

இந்நிலையில், இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் சாண்டி மற்றும் கவினுடன் மதுமிதா சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது அதில் ‘ இங்கு இருக்கும் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துகிறீர்கள். எங்களை பயன்படுத்துகிறீர்கள். வனிதா மேடம் கூறியது போல் பிக்பாஸ் வீட்டை கொஞ்ச நேரம் திறந்து வைத்தால் நான் முதலில் வெளியேறுவேன்’ என மதுமிதா கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.